கோபத்தில் கொந்தளிக்கும் தமன்னா – திருமணம் என கிளம்பிய வதந்தி.

0

தென்னிந்தியத் திரையுலகில் வெற்றிக் கதாநாயகியாக வலம் வருவது மட்டுமல்லாது ‘பொலிவூட்’ எனப்படும் ஹிந்தித் திரையுலகிலும் அவ்வப்போது தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா.

பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், நடிகை தமன்னாவுக்கு “பாஹுபலி” திரைப்படம் தேடித்தந்த புகழ் வேறு இந்தப் படங்கள் மூலமும் கிடைக்கவில்லை எனலாம். அதேவேளை, மீண்டுமொரு சரித்திரக் கதையில் தெலுங்கில் தயாராகும் “சைரா நரசிம்ம ரெட்டி” திரைப்படத்தில் தமன்னா நடித்துள்ள நிலையில், இந்தப் படமும் பெருமளவில் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் நடிகை தமன்னாவின் மவுசு அதிகரித்துள்ளது. இதன்மூலம், பல படங்களை தன்வசமாக்கியிருக்கின்றார் தமன்னா.

இது இப்படியிருக்க, தமன்னாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். அதாவது, தற்போது 29 வயதை தொட்டிருக்கும் நிலையில், நடிகை தமன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவே வதந்திகள் பரவின. மணமகன், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் எனவும், திருமணத்தின் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போடப்போகின்றார் தமன்னா என்றும் இணையத்தளத்தில் செய்திகள் பரப்பப்பட்டன.

இந்த செய்திகள் வெளியானதை அறிந்துகொண்ட நடிகை தமன்னா ஊடகத் தரப்பினரிடம் இது பற்றி கூறும்போது, “மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் எனக்கு திருமணம் என்று வெளியான செய்தி உண்மையல்ல. அத்துடன், நான் சினிமாவில் இருந்து விலகவும் மாட்டேன். திட்டமிட்ட வகையில் எனக்கு எதிராக இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. திருமணம் செய்து கொள்ளும் மனநிலையும், எண்ணமும் தற்போதைக்கு இல்லை” என்று கொதிக்கிறார் நடிகை தமன்னா.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணடித்து கவரக் காத்திருக்கும் கேரளத்துச் சிட்டு – சிக்குவாரா ‘சீயான்’ மகன்….???
Next articleஇருமலை போக்க சில வீட்டுவைத்திய முறைகள் !