கேதுவின் மாற்றத்தால் அடுத்த 18 மாதங்களுக்கு கேதுவின் அருட்பார்வையால் அபாரமான நன்மை பெறும் மூன்று ராசிகள்!

0

அடுத்த 18 மாதங்களுக்கு கேதுவின் அருட்பார்வையால் அபாரமான நன்மை பெறும் மூன்று ராசிகள்!

ஜோதிடத்தின் படி கேது 2022 ஏப்ரல் 12ம் தேதியன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். 18 மாதங்கள் துலாம் ராசியில் இருப்பார் கேது மெதுவாக நகரும் கிரகம் ஆகும்.

18 மாதங்களில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பாம்பு கிரகம். இதன்படி கேது அடுத்த 18 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2023 வரை துலாம் ராசியில் இருக்கிறார்.

இதில் புத்திக் காரகரான கேதுவின் அருட்பார்வையால் அபாரமான நன்மை பெறும் மூன்று ராசிகள்.

கடகம்

கடக ராசிக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை தரும். புதிய வேலை கிடைக்கலாம் அல்லது இருக்கும் வேலையில் பதவி உயர்வு பெறலாம். சொத்து, வாகனம் வாங்கி மகிழும் அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார் கேது.

மகரம்

மகர ராசிக்கு கேதுவின் சஞ்சாரம் நன்மை தரும். வேலை செய்பவர்களின் வருமானம் உயர்ந்தால், வியாபாரிகளின் லாபம் அதிகரிக்கும்.

திடீர் பண ஆதாயமும் உண்டாகும். இந்த நேரம் அற்புதமாக இருக்கும் என்று சொல்லலாம்.

கும்பம்

கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கேதுவின் பெயர்ச்சி இது. கும்ப ராசிக்காரர்களின் அனைத்து காரியங்களும்ம் எளிதாக நடக்கும்.

எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குறிப்பாக தேர்வு, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் வெற்றி பெறுவதும், வேலையில் சேர்வதும் எளிது.

அதுமட்டுமல்ல, பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வை கொடுத்துச் செல்வார் கேது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் முழு அதிர்ஷ்டத்தையும் அடையும் ஒரே ஒரு ராசி எது தெரியுமா?
Next articleஇன்றைய ராசி பலன் 22.04.2022 Today Rasi Palan 22-04-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!