நடந்தது என்ன காலில் விழுந்த பிறகும் இப்படி பேசுவீங்களா? டி.ஆருக்கு முன்னணி ஹீரோ கண்டனம். சில நாட்கள் முன்பு நடந்த ஒரு விழாவில் நடிகை தன்ஷிகா தன் பெயரை கூறாமல் விட்டுவிட்டார் என தொடர்ந்து அடுக்குமொழியில் அவரை வசைபாடினார் டி.ராஜேந்தர்.
தெரியாமல் பெயரை விட்டதற்கு இப்படி செய்யலாமா என பலரும் டி.ஆர் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தன்சிகா அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் கூட, தன் மகள் வயதுடைய ஒருவரிடம் இப்படி பேசலாமா” என விஷால் கேட்டுள்ளார்.
இப்படி நானே பலமுறை பெயரை விட்டுள்ளேன், அவர் மன்னிப்பு கேட்டபிறகும் வீம்புக்கு பேசியது கண்டனத்திற்குரியது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.