எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு!

0

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வருட காலத்துக்கு விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் பணம் செலுத்த முடியாமல் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலுக்கு நேற்று பணம் வழங்கப்பட்டது.

கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு பெட்ரோல் கப்பல் மற்றும் ஒரு கப்பலுக்கான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வருட காலத்துக்கு விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இம்மாதம் 12ஆம் திகதிக்கும் 14ஆம் திகதிக்கும் இடையில் முதலாவது விமான எரிபொருள் கையிருப்பு இலங்கையை வந்தடைய உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவிற்கு வழங்கப்படவிருக்கும் பதவி!
Next articleஇன்றைய ராசி பலன் 05.08.2022 Today Rasi Palan 05-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!