ஊழல் அற்ற அதிகாரியாக தெரிவாகி மண்ணுக்கு பெருமை சேர்த்தார் வைத்தியர் சத்தியமூர்த்தி !

0

ஊழல் அற்ற அதிகாரியாக தெரிவாகி மண்ணுக்கு பெருமை சேர்த்தார் வைத்தியர் சத்தியமூர்த்தி !

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் விருது பெற்று எம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். மருத்துவர் பணிப்பாளர் சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த வேளை 2015 ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார். அவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்க காரணம்.

இந்த நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்த தேர்தல் டிசம்பர் 06 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் அவருக்கு பெருமளவில் வாக்குகள் குவிந்தது. இதனையடுத்து இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

By: Tamilpiththan

Previous articleநடுவானில் மாயமான விமானம் 38 பேருடன் விபத்துக்குள்ளானதாக தகவல் ! பயணிகளின் கதி என்ன?
Next articleசூடான் தீவிபத்தில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் ! சம்பாதிக்க சென்று ஒரு மாதம் கூட ஆகவில்லை!