நாமக்கல்லில் பூஜையின் போது ஏற்பட்ட தகராறில் பூசாரி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் தூசூர் அருகே பீமநாயக்கனூரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவில் பூஜையின் போது இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சண்டையை விலக்கச் சென்ற கோவில் பூசாரி குப்புசாமியை ஒரு தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் பூசாரியையே அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: