இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது!

0

வாழ்க்கையை நீங்கள் நினைப்பது போல மகிழ்ச்சியாக வாழ பணம் என்பது மிகவும் முக்கியமானது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு பணம் வாழ்க்கையில் முக்கியமானது என்பதும் உண்மைதான். அப்படியிருக்கையில் பணக்கஷ்டமோ அல்லது தொழிலில் நஷ்டமோ ஏற்பட வேண்டுமென்று யாருமே ஆசைப்படமாட்டார்கள்.

ஜோதிடத்தின் படி காரணமும், எச்சரிக்கையும் இன்றி நம் வாழ்வில் எந்தவொரு சம்பவமும் நடப்பதில்லை. நல்ல நேரமோ, கெட்ட நேரமோ எதுவாக இருந்தாலும் அது நடப்பதற்கு முன் சில அறிகுறிகளை காட்டும். நாம் அப்போதே எச்சரிக்கையாக இருக்க தொடங்கிவிட வேண்டும். அறிகுறிகளை புரிந்து கொள்ள நாம் செய்ய வேண்டியது அவற்றை நன்கு கவனிப்பதுதான். இந்த் பதிவில் பொருளாதாரரீதியாக உங்களுக்கு சரிவு ஏற்பட போவதையும், பணக்கஷ்டம் ஏற்பட போவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

அறிகுறி 1 உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் தொடர்ந்து பழுதடைந்தாலும், அதற்கு கவனிப்பு தேவைப்பட்டாலும் இது கெட்ட சகுனம் ஆகும். இது உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படப்போகிறது என்பதை உணர்த்தும்.

அறிகுறி 2 மனைவியுடன் சண்டை போடுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் காரணமே இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக மனைவியுடன் அதிக சண்டை போட்டால் உங்களுக்கு திடீர் பணச்சிக்கலோ அல்லது நஷ்டமோ ஏற்பட போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறி 3 கடைசி நிமிடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்கள் கையில் இருந்து நழுவ ஆரம்பிக்கும் போது உங்களுக்கு நிதி பிரச்சினை ஏற்பட போகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு பெரிய வியாபார வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனால் உங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது.

அறிகுறி 4 சிலசமயம் உங்கள் ஆரோக்கியமும் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட போகிறது என்பதை உணர்த்தக்கூடும். அதீத பதட்டம், வயிறு தொடர்பான தொடர்ச்சியான பிரச்சினைகள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பணப்பிரச்சினை விரைவில் ஏற்படும்.

அறிகுறி 5 ஜோதிடத்தின் படி பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளாக போகிறவர்களுக்கு அதிக உமிழ்நீர் சுரக்கும். வழக்கத்தை விட அவர்கள் பேசும்போது வாயிலிருந்து அதிக உமிழ்நீர் வெளியேறும். இது உங்களுக்கு நஷ்டம் ஏற்படபோவதை உணர்த்தும் நிச்சயமான அறிகுறியாகும்.

அறிகுறி 6 உங்கள் வீட்டில் ஏதேனும் உயிர்பலி நேர்ந்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படப்போகிறது என்பதை உணர்த்தும். குறிப்பாக உங்கள் செல்லப்பிராணிகள் இறக்க நேர்ந்தால் நிச்சயம் நீங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்கொள்ள போகிறீர்கள்.

அறிகுறி 7 உங்கள் வீட்டின் மேல் தண்ணீர் தொட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மேற்கூரையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து ஒழுகுவது உங்கள் குடும்பம் பெரிய பணக்கஷ்டத்தில் சிக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

அறிகுறி 8 ஒரு கருப்பு மச்சம் உங்கள் கையில் தோன்ற ஆரம்பித்தால் நீங்கள் உங்களுடைய அனைத்து சேமிப்புகளையும் இழக்க போகிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு காரணம் உங்களுடைய கூட்டாளிகள் சரியில்லாமல் போவதுதான்.

அறிகுறி 9 உங்கள் முன்கதவில் காரணமே இல்லாமல் ஒரு விரிசல் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தின் மீது மிகப்பெரிய கடன்சுமை ஏற்பட போகிறது என்பதை உணர்ந்துகொண்டு அதனை சமாளிக்க தயாராகுங்கள்.

அறிகுறி 10 தங்கத்தை தொலைப்பதோ அல்லது அடிக்கடி தவறான இடத்தில் வைப்பதோ நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினராலோ அல்லது நண்பராலோ உங்கள் செல்வத்தை இழக்க போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!
Next article2019 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான ஆண்டாக அமைய போகிறது தெரியுமா?