உங்க பிறந்த திகதிக்கு நீங்க போன ஜென்மத்துல இப்படித்தான் இருந்திருப்பீர்கள்!

0

இப்போது விதி எண் மற்றும் அக எண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதைக் காண்போம்.

நியூமராலஜியில் கூறுப்படும் ஒருவரது விதி எண் மற்றும் அக எண் மூலம் முன் ஜென்மத்தை அறியலாம்.

விதி எண்
ஒருவரின் முன் ஜென்மத்தை அறிய முதலில் விதி எண்ணைக் கணக்கிட வேண்டும். விதி எண்ணை பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடம் கொண்டு கணக்கிட வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் 4-9-1992 இல் பிறந்திருந்தால், இந்த எண்களை கூட்ட வேண்டும். அதாவது 4+9+1+9+9+2=34.

இப்போது ஒற்றை எண்ணாக கொண்டு வர வேண்டும். அதாவது 3+4=7. இப்போது உங்களின் விதி எண் 7.

அக எண்
அடுத்ததாக அக எண்ணைக் கணக்கிட வேண்டும். அதற்கு உங்களின் பெயரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் உங்கள் பெயரில் உள்ள vowels-ஐ கூட்ட வேண்டும்.

அவற்றில் A=1; E=5; I=5; O=6; U=3. உதாரணமாக, உங்களின் பெயர் PRANITH என்றால், அதில் உள்ள vowels-ஐ கூட்ட வேண்டும். உங்கள் பெயரில் உள்ள vowels A+I= 1+5=6.

உங்களின் அக எண் 6. ஒருவேளை கூட்டும் போது இரட்டை எண்களாக வந்தால், அவற்றை ஒற்றை எண்களாக குறைக்க வேண்டும். அதாவது 25 என்று வந்தால் 2+5=7 என்று ஒற்றை எண்ணாக குறைக்க வேண்டும்.

கடந்தகால வாழ்க்கை எண்ணை எவ்வாறு கணக்கிடுவது?
விதி எண் மற்றும் அக எண் ஆகிய இரண்டையும் கூட்டினால் கிடைப்பது தான் கடந்த கால வாழ்க்கை எண். அதாவது 7+6=13. இந்த இரண்டை எண்களை ஒற்றை எண்களாக குறைக்க வேண்டும். 1+3=4. ஆகவே உங்களின் கடந்த கால வாழ்க்கை எண் 4.

எண் 1
நீங்கள் அரச குடும்பத்தில் பிறந்திருக்கலாம். மரியாதைமிக்க நபராக மற்றும் பலரை நிர்வகிப்பவராக இருந்திருக்கலாம். முன் ஜென்மத்தில் உங்களின் ஆலோசனைகளும், முடிவுகளும் இறுதியாக கருதப்பட்டது. இல்லாவிட்டால் அரசியலில் இருந்திருக்கலாம் அல்லது காவல் துறை போன்ற செல்வாக்குமிக்க துறையில் இருந்திருக்கலாம். நீங்கள் தற்போதைய பிறப்பில் ஒருவித தனிமையை உணர்கிறீர்களா அது முன் ஜென்மத்தில் இருந்து வந்ததாக இருக்கும்.

எண் 2
உங்களின் முன் ஜென்மத்தில் இரட்டையர்களாக பிறந்திருக்கலாம். உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக மற்றும் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவரக இருந்திருக்கலாம். உங்களின் முந்தைய பிறவியில் காதல் வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாக இருந்திருக்கும். அதுவே உங்களின் மரணத்திற்கும் காரணமாக இருக்கலாம். அந்த காதல் மீதான உங்களின் ஏக்கம் இந்த பிறவியிலும் தெரியும்.

எண் 3
முன் ஜென்மத்தில் ஒரு படைப்பு திறன் கொண்ட தொழிலான கலைஞராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருந்திருக்கலாம்.

இல்லாவிட்டால் சமையல்காரர், தோட்டக்காரர் அல்லது வீட்டு உள் அலங்கார வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கலாம். உங்களுக்கு பொருள் ஆசை எதுவும் இருந்திருக்காது. குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்திருப்பீர்கள். மொத்தத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருப்பீர்கள்.

எண் 4
இந்த எண் மிகவும் சுவாரஸ்யமான, தனித்துவமான மற்றும் சாகச வாழ்க்கையைக் குறிக்கிறது. இந்த எண்ணைக் கொண்ட பெரும்பாலானோர் ராணுவத்தில் இருந்திருக்கலாம்.

இது தவிர சிறை காவலர் அல்லது மாஸ்டர்களாக இருந்திருக்கலாம். பெரும்பாலும் வாழ்க்கையின் பெரும்பகுதியை தனிமையாகவே கழித்திருப்பீர்கள்.

எண் 5
இந்த எண்ணைக் கொண்டவர்களின் வாழ்க்கை கடினமானதாக இருந்திருக்கும். அது ஒருவேளை போர் பகுதியில் வாழ்ந்திருக்கலாம் மற்றும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் உள்ள சூழ்நிலையில் வாழ்ந்திருக்கலாம். இந்த எண்ணைக் கொண்டவர்கள் கடந்த கால வாழ்க்கை இனிமையாகவே இருந்ததில்லை.

பயம் எப்போதும் மனதில் இருந்தவாறே இருந்திருக்கும். தற்போதைய வாழ்க்கையிலும் அமைதியற்று இருந்திருப்பீர்கள்.

எண் 6
முன் ஜென்மத்தில் மத ஆர்வம் கொண்டவராக இருந்திருப்பீர்கள். இது தவிர ஆன்மீகவாதியாக இருந்திருப்பீர்கள். நடிப்பு துறையில் கூட இருந்திருக்கலாம். மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்பும் நகைச்சுவை நடிகராகவும், சர்கஸில் வேலை செய்பவராகவும் இருந்திருக்கலாம்.

எண் 7
இந்த எண்ணைக் கொண்டவர்கள் முன் ஜென்மத்தில் வாழ்க்கையை மாற்றும் அறிவுரைகளை வழங்குவதில் சிறந்தவராக அறியப்பட்ட ஒரு பிரபலமான நபராக இருந்திருப்பார்கள்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தில் நீங்கள் அறிவுரைகளை வழங்குபவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கு மிகவும் எதிர்மறையான அனுபவம் இருந்திருக்கலாம்.

எண் 8
இந்த எண்ணைக் கொண்டவர்கள் முந்தைய பிறவியில் நிறைய செல்வம் இருந்திருக்கும். நீங்கள் ஒரு பணக்கார தொழிலதிபராக அல்லது நில உரிமையாளராக இருந்திருக்கலாம். முன் ஜென்மத்தில் உங்கள் வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கிய பங்கு வகித்தது மற்றும் தற்போதைய வாழ்க்கையிலும் தான். நீங்கள் பணத்தை சம்பாதிக்க அதிகம் உழைப்பீர்கள்.

எண் 9
இந்த எண்ணிற்கு உரியவர்கள் முந்தைய வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட தொடர்பு இருந்தது. நீங்கள் ஒரு மனநோய்/ஜோதிடர், எண் கணிதம் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆராய்ச்சியாளராக இருந்திருக்கலாம். மேலும் நீங்கள் ஒரு பயணியாகவோ, மனிதாபிமானியாகவோ இருக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article30 நாட்களுக்கு அதிஷ்ட மழை இந்த ஒரே ஒரு ராசிக்கே!
Next articleஇன்றைய ராசி பலன் 04.08.2022 Today Rasi Palan 04-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!