தேங்காயை அரைக்காமலேயே இலகுவாக‌ கெட்டியான‌ தேங்காய்ப்பால் எடுப்பது எப்படித் தெரியுமா!

0

தேங்காய்ப்பால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு பொருள். இதை நாம் காய்கறிகளோடு சேர்த்து கூட்டாக, இடியப்பம், அப்பம் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த கலவையாகவும் பயன்படுத்துவோம்.

அப்படி நம்முடைய வீட்டில் இடியப்பம் செய்து கொண்டிருக்கும் போது ஒருவேளை மன்சாரம் தண்டிப்பட்டால் எப்படி தேங்காய்ப்பால் எடுக்க முடியும்?கவலைப்படாதீர்கள்…… மிகவும் இலகுவான வழி ஒன்று உள்ளது. மின்சாரம், அம்மி, மிக்சி எதுவும், இல்லாமலே தேங்காய்ப்பால் எடுக்க முடியும்.

தேங்காயை நன்றாக பூப்போல துருவிக் கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை இறக்கி, துருவி வைத்திருக்கும் தேங்காயை அதில் போட்டு, நன்கு ஓர் அரைமணி நேரத்துக்கு மூடி வைத்து விடுங்கள்

அரை மணி நேரம் கழித்து, ஒரு மெல்லிய சுத்தமான துணியை எடுத்து ஒரு பாத்திரத்தின் மேல் போட்டு, இதில் ஏற்கனேவே வெந்நீரில் போட்டு வைத்திருக்கும் தேங்காய்த்துருவலை அந்த துணியில் ஊற்றி நன்கு வடிகட்டுங்கள்.துணியை நன்கு இறுக்கிப் பிழிந்தால் ஒட்டுமொத்த தேங்காய்ப்பாலும் அந்த பாத்திரத்தில் இறங்கிவிடும்.

இப்போது, நாம் வழக்கமாக எடுக்கும் கெட்டியான தேங்காய்ப்பாலைப் போன்று நல்ல திக்கான தேங்காய்ப்பால் நமக்குக் கிடைத்துவிடும்.என்ன இல்லத்தரசிகளே! இனிமேல் தேங்காய்ப்பால் எடுப்பதற்கு மிக்ஸி, கிரைண்டர் எதுவும் தேவையில்லைத் தானே!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தலாமா!
Next articleபலவிதமான‌ உடல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேன் நெல்லிக்காய்!