திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடற்படை தலைமையகத்தில் கடமையாற்றும் 24 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான விதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இராணுவ வீரர் மாடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதே சமயம் எதிர்த் திசையில் வந்த கெப் ரக வாகனம் இராணுவ அதிகாரியின் மீது மோதியுள்ளது.
இதேவேளை, விபத்தில் இராணுவ வீரர் சம்ப இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், கெப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இராணுவ வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வரும் நிலையில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.