இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசையா! யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா!

0

இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.

உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா?
இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும்.

எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு.

இங்கு யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று பார்க்கலாம்.

கருவுறுதல் மருந்துகளை எடுத்து வரும் பெண்களுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எப்படியெனில் இந்த மருந்துகளை பெண்கள் எடுக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவருவதால், இந்நேரம் உறவில் ஈடுபடும் போது விந்தணுக்கள் கருமுட்டைகளில் நுழைந்து இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெரும்பாலான பெண்கள் 35 வயதிற்கும் அதிகமானோர் தான். மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும் இளம் பெண்களை விட, வயது அதிகமான பெண்களுக்கே இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒரு பெண் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையை மேற்கொண்டால், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். எப்படியெனில் இம்முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டைகளை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில் ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுறச் செய்து, பின் மீண்டும் அந்த கருமுட்டையை பெண்ணின் கருப்பையினுள் வைக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் கருவுற்று கருப்பையினுள் செலுத்துவதால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சில நேரங்களில் ஒரே ஒரு கருமுட்டை இரண்டாக பிளவுபட்டு இரட்டைக் குழந்தைகளாக உருவாகும்.
உயரமான மற்றும் ஆரோக்கியமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாம். மேலும் ஆய்விலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயரமான பெண்களின் உடலில் வளர்ச்சிக்கு காரணியான இன்சுலின் அதிகம் இருப்பது தான் என்று கூறுகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்! பரபரப்பை ஏற்படுத்திய காட்சி!
Next articleநீர்த்துப்போன விந்து கெட்டியாக எளிய மருத்துவம்!