இன்றைய ராசிபலன் 23-09-2017
இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017
புரட்டாசி 7
நல்ல நேரம்
காலை: 10:30AM – 11:30AM
மாலை: 4:30PM – 5:30PM
இராகுகாலம்
காலை: 9:00AM – 10:30AM
இரவு: 3:00AM – 4:30AM
எமகண்டம்
பகல்: 1:30PM – 3:00PM
இரவு: 7:30PM – 9:00PM
மேஷம்
காரியங்கள் அனைத்தும் கை கூடுவதோடு, காதலும் கை கூடும். சாதுர்யமான, இனிமையான பேச்சால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வர்.
ரிஷபம்
இன்று, பலவகைகளிலும் பணவருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பு நலம் தரும்.
மிதுனம்
பிள்ளைகளால் சந்தோஷம் குறையும். எவ்வளவு திறமையுடன் செயல் பட்டாலும் நல்ல பெயர் கிடைக்காது. பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். வெற்றிக்கு வழியில்லாத வகையில் ஏமாற்றங்களும் ஏற்படும்.
கன்னி
சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். காரியத்தடை ஏற்படும்.
மகரம்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரிய சாதனைகள் புரிந்து புகழடைவீர்கள். புதிய நகைகள் மற்றும் செல்வம் சேரும். வெளிநாடு செல்ல சாதகமான காலம்.
கடகம்
இன்று, எல்லாவற்றிலும், எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷ மற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும்.
சிம்மம்
வெற்றி மேல் வெற்றி வரும். அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர்பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும்.
துலாம்
உயர் போகம், சந்ததி விருத்தி ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இலாபமும், மணவாழ்க்கை மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும்.
மீனம்
நேர்மையாக நடக்கவேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் செயலால் உறவுகளே பகையாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
தனுசு
இன்று, மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். அன்பளிப்புக்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
அதிகப் பணியின் காரணமாக நேரத்துக்குக்கு உணவருந்த முடியாது. கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கும்பம்
குடும்பத்தோடு செல்லும் இன்பச் சுற்றுலா இனிமை தரும். நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.