இன்றைய ராசிபலன் 11-09-2017

0

இன்றைய ராசிபலன் தேதி: திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017

மேஷம்
நீண்ட நாளாகக் காத்திருந்தவர்கள் வீட்டில், மேளச்சத்தம் கேட்கும். தொழில் துறையினருக்கு உற்பத்திப் பெருக்கம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஓரளவு குறையும்.

ரிஷபம்
அதிகாரிகள் திருப்தி அடையும் வகையில், கடமை உணர்வுடன் செயல்பட்டு அவர்களின் மனம் கவர்வீர்கள். பெண்களால் வீண்செலவுகள் ஏற்படும். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம்.

மிதுனம்
புதிய சொத்துச் சேர்க்கைகள் ஏற்படும். மனைவியுடன் கழிக்கும் காலங்கள் மகிழ்ச்சி மிக்கதாக அமையும். கலைஞர்களின் வருமான அளவு உயரும். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.

கன்னி
மனைவியின் கலகத்தால், குடும்பத்தாரிடையே ஒற்றுமை குறையும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நிம்மதியற்ற நிலையால் , தூக்கமின்மையும் ஏற்படும்.

மகரம்
இன்றைய ஒருநாள் கழிவது ஒரு யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

கடகம்
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் கூடும் அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.

சிம்மம்
ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான பாக்கியம் உருவாகும். தீர்த்த யாத்திரைகள், உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.

துலாம்
மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.

மீனம்
இன்றைய வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. குடும்பத்தில் உள்ளோரை அனுசரித்துச் செல்லாவிட்டால், அல்லல்பட நேரலாம். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.

தனுசு
வேலைகளைப் பொருத்தவரை எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. தனவரவு சுமாராக இருக்கும்.

விருச்சிகம்
புதிய விரிவாக்கங்களினால் வியாபாரம் களைகட்டி ஆதாயம் பெருகும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம், வங்கிக் கடன் உதவியால் நிறைவேறும்.

கும்பம்
பல வழிகளிலும் பணவரவு ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு இனிமை தரும். திருமணம், தொழில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017
ஆவணி
26
கார்த்திகை விரதம்
நல்ல நேரம்
காலை: 6:00AM – 7:00AM
மாலை: 3:00PM – 4:00PM
இராகுகாலம்
காலை: 7:30AM – 9:00AM
மாலை: 4:30PM – 6:00PM
எமகண்டம்
காலை: 10:30AM – 12:00AM
இரவு: 3:00AM – 4:30AM

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்.
Next articleஇன்றைய ராசிபலன் 12-09-2017