இந்தியாவை குலைநடுங்க வைத்த பயங்கரவாத தாக்குதல்! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

0

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவிக்கையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 44 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. நரேந்திர மோடி அரசின் மெத்தனம் எனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவம் தவறியுள்ளது எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டாலும்,

தேசம் முழுவதும் ஒருமித்த கருத்தாக, குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச அளவில் அறியப்படும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பாடகி ஒருவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்தது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் தரப்பில் அதற்கு விளக்கம் ஏதும் தரப்படவில்லை. தற்போது மீண்டும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹ்மான்,

தாக்குதலுக்கு கண்டனம் ஏதும் தெரிவிக்காமல், வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி என குறிப்பிட்டுள்ளதுடன், தேசம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் ரஹ்மானின் இந்த பதிவு மிகவும் தாமதமானது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கோவில்பட்டி விவசாயியின் மகன் பலி! கதறி அழுத சுற்றுப்பட்டி கிராம மக்கள்!
Next articleபாலியல் ரீதியாக பேசிக்கொள்ளும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்! இயக்குனர் அனிதாவின் அதிரடி!