இந்த ராசிக்காரர்கள் சரியான ஓட்டைவாயாக இருப்பார்கள்! இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லிவிடாதீர்கள்!

0

மற்ற உயிரினங்களிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுவது என்னவெனில் மனிதர்களால் மட்டும்தான் பேசமுடியும். மனிதர்களுக்கு பேச்சு என்பது கடவுள் குடுத்த வரமாகும். அதனை சரியாக பயன்படுத்தவுதும், தவறாக பயன்படுத்தவுதும் நமது கைகளில்தான் உள்ளது. இறைவன் கொடுத்த வரத்தை கொண்டு மற்றவர்களின் மனதை காயப்படுத்துபவர்களே இங்கு அதிகமாக உள்ளனர்.

நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் அளவாக பேசுவதே அனைவருக்கும் நல்லது. சிலர் இயல்பலாகவே மிகவும் குறைவாக பேசுபவர்களாக இருப்பார்கள், சிலர் வாயை திறந்தால் மூடவே மாட்டார்கள். இதில் அவர்களின் குணம் என்பதையும் தாண்டி அவர்களின் ராசியும் முக்கியப்பங்கை வகிக்கிறது. ஒருவரின் ராசியை பொறுத்து அவர்கள் எப்படி பேசக்கூடியவர்கள் என்று கணிக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகமாக பேசியே அடுத்தவர்களை கொள்பவர்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பேசுவது மிகவும் பிடிக்கும் என்பதை விட அவர்களுக்கு அது நல்லாவே வரக்கூடிய ஒன்று. ஆனால் இதனால் அவர்கள் பல வாய்த்தகராறில் ஈடுப்பட நேரிடும், குறிப்பாக சமூக வலைத்தளங்களில். அவர்கள் தங்கள் எண்ணங்களை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தி விடுவார்கள். அவர்களுடன் இருக்கும்போது அவர்களின் உளறுவாயால் மற்றவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும்.

துலாம்
இவர்கள் தகவல்களை பகிர்ந்துகொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். தகவல்களை பகிர்ந்து கொள்ள தனக்கிருக்கும் உரிமையை அவர்கள் எப்பொழுதும் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்கள். மற்றவர்கள் அவர்களிடம் கூறிய ரகசியங்கள் தன்னையுமறியாது சிலசமயம் மற்றவர்களிடம் பகிர்ந்து விடுவார்கள். ரகசியங்களை பாதுகாப்பதை விட அவர்கள் மற்றவர்களின் பொழுதுபோக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஆனால் அதற்காக மற்றவர்களை கிண்டல் செய்யவோ, புண்படுத்தவோ கூடாது என்பதை உணரமாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்கார்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்கு சிறநத வழி எது? கதை சொல்வதோ, அதிர்ச்சிகரமான அல்லது பொழுதுபோக்கான தகவல்களையோ மற்றவர்களிடம் கூறுவதுதான். சிம்ம ராசிக்கார்களிடம் இருக்கும் சிறந்த குணம் என்னவெனில் சாதாரண ஒரு செய்தியை கூட தந்து அசாத்திய கற்பனை மூலம் மற்றவர்களை கவரும் வண்ணம் கூறுவதுதான். ஆனால் அவர்கள் கூறுவது பொய் என தெரிய வரும் பட்சத்தில் அது அவர்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்கும். இவர்கள் மற்றவர்களை தங்கள் பேச்சின் மூலம் தூண்டக்கூடியவர்கள் ஆனால் எப்போது பேச்சை நிறுத்த வேண்டும் என்று இவர்களுக்கு சுத்தமாக தெரியாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புத்திக்கூர்மையும், தந்திரமும் மிக்கவர்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை விட தங்களின் சொந்த கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் அவர்களுடன் உங்களால் ஒருபோதும் ஒரு முக்கியமான விவாதத்தில் ஈடுபடவே முடியாது. அப்படி செய்தாலும் அது வீண்தான். ஒருவேளை அவர்கள் விவாதத்தில் தோற்கும் நிலை வந்துவிட்டால் உடனடியாக அதனை திசைதிருப்ப தொடங்கி விடுவார்கள். இவர்கள் அதிகம் பேசினாலும் அது எப்போதுமே ஒருதலைப்பட்சமாகவே இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா!
Next articleஉங்களின் பிறந்த நேரத்தின் படி உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா!