இந்த சனிப்பெயர்ச்சியில் 3 ஆம் எண்ணுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா?

0
959

எண்களின் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்களை அறிந்து கொள்ள எண்கணிதம் உதவுகிறது.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிந்து கொள்ள அவர்களுக்கான ஆட்சி எண் கணக்கிடப்படவேண்டும்.

இந்த ஆட்சி எண் அடிப்படையில் ஒரு தனிநபரின் குணங்களை எளிதாக புரிந்து கொள்ள இயலும்.

ஒவ்வொரும் ஆட்சி எண்ணுக்குரியவரும் ஒரு குறிப்பிட்ட குணநலம் கொண்டிருப்பார்கள். அந்த விதத்தில் எண் 3 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவரின் குணநலம் பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மூன்றாம் எண் அன்பர்களே.. பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும்.

உழைப்பால் மற்றவர்களையும் வாழவைப்பீர்கள். உங்களிடம் வாக்கு கொடுப்பவர்கள் அதன்படி நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில், சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதனால் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமல் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வரஇருக்கின்றன. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும்.

அதிகரிக்கும் செலவுகளை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.

அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும். உங்கள் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதைவிட மற்றவருக்குப் பயன்படும். நீரிழிவு, கல்லீரல் நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும்.

ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களை அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள்.

சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பணவரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்
வியாழக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலம் சிறக்கும்.

துளசியை அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சமர்ப்பித்து வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்
“ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ:” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்
2, 3, 5, 6.

அதிர்ஷ்ட கிழமைகள்
திங்கள்
புதன்
வியாழன்

Previous articleஇன்றைய ராசி பலன் – 27.09.2019 வெள்ளிக்கிழமை !
Next articleதப்பி தவறி கூட தெய்வ வழிபாட்டில் போது இந்த செயல்கள் எதுவும் செய்துவிடாதீங்க.