21 வயதில் எனது நிலை என்ன என்பதனை முதன் முதலாக உணர்ந்தேன் என்று சாதித்து கொண்டிருக்கும் திருநங்கை ஷாக்ஷி தெரிவித்துள்ளார்.
ஆண் மற்றும் பெண் குரலில் பாடி ஷாக்ஷி அதிக ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.
நான் இப்படி இருப்பதை என்னி பல தடவைகள் வேதனையடைந்துள்ளேன், என் நிலை என்னை போன்றவர்களுக்கு மாத்திரமே புரியும்.
என் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் தான் எனக்கு துனையாக இருந்தது. எனக்கு 21 ஒரு வயது இருக்கும் போது நான் என்னவாக வேண்டும் என்பதை உணர்ந்தேன். அதற்காக நான் கடுமையாக உழைத்தேன்.
தற்போது வெற்றியாளராக இருக்க என்னுடைய முயற்சிதான் காரணம் என்றும் ஷாக்ஷி கூறியுள்ளார்.
இதேவேளை, ஷாக்ஷி பாடலில் மாத்திரம் அல்ல மியூசிக்கலி மற்றும் டாப்மாஸ் போன்றவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
அவருக்கு தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடல் போட்டியில் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.