அயல்நாட்டவர்கள் 13ஆம் எண்ணைக் கண்டு பயப்படுவது ஏன்!

0

அயல்நாடுகளில் ஆவிகளுக்குரிய எண்ணாக 13ஐ கருதுகிறார்கள். துர் ஆவிகளின் எண் 13. அந்த எண்ணிற்குரிய வீடுகளுக்கு ஆவிகள் வருகின்றன என்று கருதப்படுகிறது.

லண்டன் போன்ற இடங்களிலும் சுடுகாட்டிற்கும், 13ஆம் வீட்டிற்கும் தொடர்பு இருக்கும். அங்கு எரிக்கப்படும் ஆவிகள் உடனே 13ஆம் வீட்டிற்கு வந்துவிடும் என்றெல்லாம் கூறப்படுகிறது.

ஆனால் நமது இந்திய ஜோதிடத்தில் 13ஆம் எண் அவ்வளவு ஒன்றும் மோசமானது அல்ல.

1 என்றால் சூரியன், 3 என்றால் குரு, ஒன்றும் மூன்றும் சேர்ந்து உருவாகக் கூடிய முடிவு 4. அதனால் அது ஒன்றும் அவ்வளவு மோசமான எண் கிடையாது.

உள் மனத்தில் இருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வரும் எண்தான் 13. 13ஆம் தேதியில் பிறந்தவர்கள் கொஞ்சம் அதிக ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆவிகளுடன் பேசுவது போன்றவற்றை செய்வார்கள். கோயிலுக்குச் செல்வதை விட, சித்தர்களின் மடங்களுக்குச் செல்வது, நள்ளிரவில் தனியாகப் போய் அமர்ந்து கொண்ட ஆவிகளுடன் பேசுவது போன்ற முயற்சிகள் செய்வார்கள்.

மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அதை அப்படியே ஒப்புக் கொள்ளாமல், அதனை அறிவுக்கு உட்படுத்தி, அது ஏன் எப்படி என்று தெளிவுப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே 13ஐ கெட்ட எண் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில நாடுகளில் அப்படி ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அவ்வளவே.

இங்கே 8 என்ற எண்ணை அவ்வாறு தானே சொல்கிறார்கள்?
தற்போது அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தற்போது 8 மற்றும் கருப்பு நிற வண்டியை தவிர்ப்பதெல்லாம் குறைந்துவிட்டது.

8 என்பது சனி. அதனால் முதலில் பயந்தார்கள். தற்போதெல்லாம் ஒரு சிலருக்கு நான்கு 8 வர்ற மாதிரி அல்லது இரண்டு 8 வர்ற மாதிரி எண் பலகையுள்ள வாகனத்தை வாங்கும்படி நாங்களே அறிவுரை கூறுகிறோம்.

சனி நமது ஜாதகத்திற்கு ஏற்றதாக இருந்தால் கருப்பு நிற வாகனம், 8இல் எண் பலகை எல்லாம் எடுக்கலாம். தவறே இல்லை.

ஒரு சிலர்தான் 8ஐ ஒதுக்குகிறார்கள். மற்றபடி நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

பெரும் பணக்காரர்கள் எல்லாம் தற்போது 8ஐ பயன்படுத்துகிறார்கள்.ஆனால் 8ஆம் எண்ணை எடுத்து சிவப்பு நிற வண்டியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வண்டி எண்ணுக்கும், நிறத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் இருப்பது நல்லது. அவற்றுக்குள் எதிர்ப்பு வரக் கூடாது.

8ஆம் எண்ணை எடுத்தால் விபத்து என்பதெல்லாம் இல்லை. வாகனத்தின் கூட்டு எண் 8 ஆக இருந்து, வாகனத்தின் நிறம் சிவப்பாக, பிரவுன், ஆரஞ்சு நிறமாக இருந்தால் விபத்து, அடிக்கடி தொல்லை கொடுக்கும். இந்த நிறத்தில் இல்லாமல் மீதி நிறங்களில் இருக்கலாம். அருமையாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசகுன‌ம் பா‌ர்‌ப்பது ச‌ரியா! பிழையா!
Next articleவாஸ்துபடி கிணற்றை மூடலாமா!