அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கும் சனி! சனியால் யோகத்தையும் கஸ்டத்தையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்!
சூரியனும் சனியும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மகர ராசியில் இணைந்திருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
மேஷம்
பலவித பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகாிக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்
பாக்ய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் செய்யும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.
மிதுனம்
தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் சஞ்சரிப்பதால் தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம்.
கடகம்
உத்யோகத்தில் கடன் கேட்டிருந்தவா்களுக்கு கிடைக்கும். ஈகோ, பிடிவாதம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை அவசியம்.
சிம்மம்
பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். புகழ் கிடைக்கும். திடீர் பண வருவாய் கிடைக்கும். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.
கன்னி
பண வருவாய் இருக்கும். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம் உத்யோகம் தொழிலில் எதிா்பாா்திருந்த இடத்தில் தடைகளை ஏற்படும்.
துலாம்
உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். தொழிலில் திடீர் மாற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
ராசிக்கு மூன்றாவது வீட்டில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன. திடீர் பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
தனுசு
ராசிக்கு இரண்டாவது வீட்டில் சூரியன், சனி, புதன் என மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் வார்த்தைகளில் கவனம் தேவை. நிதான போக்கை கடைபிடிக்கவும். திடீர் பண ஆதாயம் உண்டாகும்.
மகரம்
உங்கள் ராசியில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் விழிப்புணர்வு அவசியம்.
கும்பம்
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள்.
மீனம்
லாப ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.
இது யோகமான காலமாகும். எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும்.