இப்போது சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டரை விட அதிகளவு ஸ்மார்ட்போன்கள் தான் உபயோகம் செய்கின்றனர், ஆனால் கம்ப்யூட்டரில் தான் குறிப்பிட்ட நன்மைகள் உள்ளது. மேலும் மிக எளிமையாகவும் பயன்படுத்த முடியும். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் கீ போர்டு ஷார்ட்க்ட்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பல்வேறு இடங்களில் இந்த ஷார்ட்க்ட் முறை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதுவரும் கணினி மற்றும் லேப்டாப் மாடல்கள் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டவையாக உள்ளது எனவே, கீபோர்டு ஷார்ட்கட்கள் பயன்படுத்தி வேலை செய்தால் தான் மிகவும் எளிமையாக இருக்கும்.
1.Ctrl+Z: Ctrl+Z பயன்படுத்தி நீங்கள் அன்டோ செய்ய முடியும். குறிப்பாக கணினியில் நீங்கள் விரும்பாத கோப்பை நீக்க இந்த வழிமுறை உதவுசெய்யும்.
2.Ctrl+W: Ctrl+W பயன்படுத்தி கணினியில் எந்தவொரு இன்டர்நெட் டேப், டாக்குமென்ட், வீடியோ, போன்ற அனைத்தையும் குளோஸ் (Close) செய்ய முடியும்.
3.Ctrl+A Ctrl+A பயன்படுத்தி கணினியில் உள்ள அனைத்து கோப்புகள், வீடியோ, புகைப்படம் போன்ற அனைத்தையும் தேர்ந்தெடுக்க உதவும், மேலும் இவற்றை பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்
4.Alt+Tab: உங்கள் கம்ப்யூட்டரில் இணையம், வீடியோ, கோப்புகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இயக்கும்போது Alt+Tab பயனுள்ளதாக இருக்கும், மேலும் உடனே திரையை மாற்றித்தரும் அம்சத்தை கொண்டுள்ளது
5.Alt+F4: கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது தேவையில்லாத டேப் குளோஸ் (Close) செய்ய உதவுகிறது.
6.Win+D: விண்டோஸ் + d கிளிக் செய்தால் உங்கள் முகப்பு திரையை பார்வையில் கொண்டு வரும் அம்சத்தை கொண்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எந்தவொரு கோப்புகள் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டை உபயோகம் செய்தாலும் உடனே Win+D கிளிக் செய்தால் முகப்பு திரையை கொண்டுவரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
7.Win+left arrow or Win+right arrow Win+left arrow or Win+right arrow-இந்த வழிமுறைகள் பொறுத்தவரை நீங்கள் கணினியில் பயன்படுத்தும் கோப்புகளை இடதுபுறம்மற்றும் வலதுபுறம் பயன்படுத்த உதவும்.
8.Win+Tab Win+Tab-பொறுத்தவரை கம்ப்யூட்டரில் இருக்கும் திரையை மாற்ற உதவும்.
9.Tab and Shift+Tab: Tab and Shift+Tab பொதுவாக இன்டர்நெட் டேப் பகுதியை மாற்றியமைக்கவும், நகர்த்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
10.Ctrl+Esc Ctrl+Esc பயன்படுத்தி மிக எளிமையாக மெனுவை திறக்க முடியும்.