இன்றைய ராசி பலன் 30.11.2021 Today Rasi Palan 30-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 30-11-2021 கார்த்திகை மாதம் 14ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். இன்று ஏகாதசி திதி பின்இரவு 02.14 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 08.34 வரை பின்பு சித்திரை. இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. இன்று பெருமாள் வழிபாடு செய்வது நல்லது. தனியநாள். இன்றைய தினம் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 03.00-04.30
எம கண்டம்: காலை 09.00-10.30
குளிகன்: மதியம் 12.00-1.30
சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் வீண் செலவுகளை தவிர்த்து சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியத்தை கூட சிரமபட்டு முடிக்க நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்கள்!

இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வேலையில் தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 29.11.2021 Today Rasi Palan 29-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleடிசம்பர் மதத்தில் நிகழும் கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்காரர்கள் அதிகமான நல்ல பலன்களைப் பெறப்போகிறார்கள்! அந்த ராசிக்காரர்கள் யார்!