Today Rasi Palan 28-01-2020 இன்றைய ராசி பலன் 28.01.2020 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Today Calendar 28/01/2020 Tuesday Indraya Rasipalan

0

Today Rasi Palan 28-01-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 28-01-2020 இன்றைய பஞ்சாங்கம்: 28-01-2020, தை மாதம் 14, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் காலை 09.23 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
எம கண்டம் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
குளிகன் மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
சுப ஹோரைகள் காலை 8.00 தொடக்கம் வரை
மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மாலை 04.30 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 08.00 வரை, 10.00 தொடக்கம் 12.00 வரை.

இன்றைய ராசி பலன் 28.01.2020

மேஷம் நற்செயல் உண்டாகும்.
ரிஷபம் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம் பரிசு கிடைக்கும்.
கடகம் நன்மை ஏற்படும்.
சிம்மம் வெற்றி உண்டாகும்.
கன்னி ஆர்வம் ஏற்படும்.
துலாம் முயற்சி ஏற்படும்.
விருச்சிகம் அச்சம் ஏற்படும்.
தனுசு வரவு கிடைக்கும்.
மகரம் நலம் உண்டாகும்.
கும்பம் பக்தி உண்டாகும்.
மீனம் பாராட்டு கிடைக்கும்.

மேஷம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று வேலை விட‌யமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை வியாபாரத்தில் அடையலாம். பொன் பொருள் என்பன‌ சேரும். இன்று எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் இருந்து வந்த‌ பிரச்சினைகள் தீரும். வேலை நிமித்தம் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்களுக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். இன்று வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இதுவரை தாமதமான காரியங்கள் கூட எளிதில் முடியும்.

மிதுனம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று தொழில்ரீதியான‌ எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். வேலையிடத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காணலாம். குடும்பத்தில் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை காணப்படும்.

கடகம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு பிரச்சனைகள் ஏற்படும் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் இருப்பீர்கள். வேலைத்தலத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியிடத்து பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனத்துடன் செயற்படவும்.

சிம்மம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் அனுகூலமான‌ பலன் கிடைக்கும். இறை வழிபாடு நிம்மதியை தருவதோடு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள் அதனால் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

கன்னி ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று தேவைகள் யாவும் பூர்த்தியாவதோடு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் வங்கி சேமிப்பு உயரும். மாணவர்கள் படிப்பு விடயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை ஏற்படும். சிக்கனத்துடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

துலாம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று ஆடம்பர பொருட்களால் வாங்குவதால் சேமிப்பு குறையும். வேலைதளத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உங்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவுகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி இன்மை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுக்கவும்.

விருச்சிகம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றலாம். உத்தியோகத்தில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளுவை குறைக்கலாம். நண்பர்கள் உதவியால் கடன்களை குறைக்க முடியும். குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு ஏற்படும். வாகனங்களால் வீண் செலவுககள் ஏற்படலாம்.

தனுசு ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று வியாபாரத்தில் எதிர்பாராத விதத்தில் லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். கடன் பிரச்சினை குறைவடையும். வேலைத்தளத்தில் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.

மகரம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று வேலையிடத்தில் சகஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. நற்காரிய முயற்சிகளில் அனுகூலமான‌ பலன்கள் உண்டாகும். வராத பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் அவதானம் தேவை.

கும்பம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று சகோதரர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்துக்களால் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மீனம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் இருந்த‌ பாதிப்புகள் சற்று குறையும். கொடுக்கல்& வாங்கல் விடயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களின் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலமான பலன் உண்டாகும்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleCoronavirus in Tamil கொரோனா வைரஸ் என்றால் என்ன? கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? தடுப்பது எப்படி? சிகிச்சை என்ன? நோயின் தீவிரம் என்ன? கரோனா வைரஸ்.
Next articleCoronavirus Symptoms: உலகை அச்சுறுத்தும் Coronavirus: ஒரு விளக்கம்! Prevention of Coronavirus Causes, Treatments, Types, Diagnosis, Transmitted.