Today Rasi Palan 26-01-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.
Today Rasi Palan 26-01-2020:இன்றைய பஞ்சாங்கம்: 26-01-2020, தை 12, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பின்இரவு 06.16 வரை பின்பு வளர்பிறை திரிதியை. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். வாஸ்து நாள். மனை பூஜை செய்ய உகந்த நேரம் 10.46 மணி முதல் 11.22 மணி வரை.
இராகு காலம் மாலை 04.30 தொடக்கம் 06.00 வரை
எம கண்டம் பகல் 12.00 தொடக்கம் 01.30 வரை
குளிகன் பிற்பகல் 03.00 தொடக்கம் 04.30 வரை
சுப ஹோரைகள் காலை 7.00 தொடக்கம் 9.00 வரை
பகல் 11.00 தொடக்கம் 12.00 வரை
மதியம் 02.00 தொடக்கம் 04.00 வரை
மாலை 06.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 11.00 வரை
இன்றைய ராசி பலன் 26.01.2020
மேஷம் நஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் வரவு ஏற்படும்.
மிதுனம் லாபம் கிடைக்கும்.
கடகம் கடன் தீரும்.
சிம்மம் உற்சாகம் உண்டாகும்.
கன்னி கவலை ஏற்படும்.
துலாம் சுகம் கிடைக்கும்.
விருச்சிகம் ஆதரவு கிட்டும்.
தனுசு வெற்றி கிடைக்கும்.
மகரம் போட்டி உண்டாகும்.
கும்பம் பொறுமை உண்டாகும்.
மீனம் இன்பம் ஏற்படும்.
மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து காணப்படும். புதிய பொருட்கள் வாங்கும் நிலை ஏற்படும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்து காணப்படும். உங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். மனைவியின் உறவுகள் உதவிக்கரம் நீட்டுவர்.
ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று வேலையாட்கள் உங்களின் குணமறிந்து செயலாற்றுவார்கள். குடும்பத்தவர்கள் ஒத்துளைப்புடன் நடந்துகொள்வர். கடன்கள் தீரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சியுடன் கூடிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் மருத்துவத்திற்காக சிறு செலவுகள் ஏற்படும்.
மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்ககுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் சிந்தித்து செயலாற்றுவது நல்லது. குடும்பத்தினருடன் மனச்சங்கடங்கள் ஏற்படுவதால்ம் நிம்மதியில்லாத நிலை தோன்றும்.கைக்கு வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதம் ஏற்படும்.
கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று கடன் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது.பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களின் போது கவனத்துடன் செல்வது நல்லது. பெரியோர்களால் மன கஷ்டங்கள் ஏற்படும்.
சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். பெண்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினருடன் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். நல்ல காரிய பேச்சுக்களில் சாதகமான பலன் உண்டாகும்.
கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். இன்று நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியாக பிரச்சினைகள் தோன்றலாம். பயணங்களின் போது கவனம் தேவை. அன்றாட தேவைகளை செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் சிறந்த ஆலோசனைகளால் உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு வராத கடன்கள் வசூலாகும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று திருமணம் போன்ற சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். நிலையான சொத்துக்கள் வாங்க விற்க அனுகூலமான நாளாகும். வங்கி சேமிப்பு உயரும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவியிடையே சிறு சிறு மன கசப்புக்கள் ஏற்படலாம். நெருங்கிய உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அன்றாட பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். உடல் நலனில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம்.
மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களின் பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்.
கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும்.
மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று தொழில் ரீதியான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களுடனான நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
ராசி பலன் ஜோதிடம்