Today Rasi Palan 25-01-2020 இன்றைய ராசி பலன் 25.01.2020 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை Today Calendar 25/01/2020 Friday Indraya Rasipalan

0

Today Rasi Palan 25-01-2020

Today Rasi Palan 25-01-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 25-01-2020 இன்றைய பஞ்சாங்கம்: 25.01.2020, தை 11, சனிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.31 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 04.35 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். Today Rasi Palan 25-01-2020

இராகு காலம் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
எம கண்டம் மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
குளிகன் காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
சுப ஹோரைகள் காலை 07.00 தொடக்கம் 08.00 வரை
பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 10.00.

இன்றைய ராசி பலன் 25.01.2020

மேஷம் உட்சாகம் உண்டாகும்.
ரிஷபம் லாபம் கிடைக்கும்.
மிதுனம் உயர்வு ஏற்படும்.
கடகம் செலவு ஏற்படும்.
சிம்மம் ஏமாற்றம் உண்டாகும்.
கன்னி வைராக்கியம் ஏற்படும்.
துலாம் ஆதாயம் ஏற்படும்.
விருச்சிகம் சஞ்சலம் ஏற்படும்.
தனுசு சிந்தனை ஏற்படும்.
மகரம் தொல்லை கிடைக்கும்.
கும்பம் முயற்சி உண்டாகும்.
மீனம் அதிருப்தி ஏற்படும்.

மேஷம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.

கிடைக்கும் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோர் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். நல்லது நடக்கும் நாள்.

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான உதவிகள் கேட்ட இடத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சாதகமாக செயல்படுவார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தாமதமாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிலும் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத்தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றி கிட்டும் நாள்.

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து முன்னேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து தைரியமாக செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மூலம் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உயர்வு கிட்டும் நாள்.

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று எதிர்பாராத வகையில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் போட்டிகள் குறையும். உற்சாகமான நாள்.

மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதால் தேவையற்ற சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிலும் பொறுமை தேவை. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

எந்த காரியத்தையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வதால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதத்தை தவிர்க்கவும். போராடி வெல்லும் நாள்.

எந்த காரியத்தையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வதால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதத்தை தவிர்க்கவும். போராடி வெல்லும் நாள்.

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்; உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி கரமாக இருப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுவையான புதினா புலாவ் செய்வது எப்படி
Next articleToday Rasi Palan 26-01-2020 இன்றைய ராசி பலன் 26.01.2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை Today Calendar 26/01/2020 Sunday Indraya Rasipalan