இன்று 24-07-2022 ஆடி மாதம் 08ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று ஏகாதசி திதி பகல் 01.46 வரை பின்பு தேய்பிறை துவாதசி. இன்று ரோகிணி நட்சத்திரம் இரவு 10.00 வரை பின்பு மிருகசீரிஷம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். இன்று நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். இன்று பெருமாள் வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷம் ராசிக்கு: இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.
ரிஷபம் ராசிக்கு: இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம் ராசிக்கு: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம் ராசிக்கு: இன்று உங்களுக்கு ஆச்சிரியப்படுத்தகூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியோர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம் ராசிக்கு: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கன்னி ராசிக்கு: இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
துலாம் ராசிக்கு: இன்று உங்களுக்கு மனகுழப்பம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
விருச்சிகம் ராசிக்கு: இன்று குடும்பத்தில் இருந்த ஒற்றுமை குறைவுகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
தனுசு ராசிக்கு: இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
மகரம் ராசிக்கு: இன்று எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கும்பம் ராசிக்கு: இன்று பொருளாதார நிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது. குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கவனம் தேவை. திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
மீனம் ராசிக்கு: இன்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் விலகும். புதிய பொருள் வாங்குவீர்கள்.