இன்று 22-02-2022 மாசி மாதம் 10 ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். சஷ்டி திதி மாலை 06.35 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சுவாதி நட்சத்திரம் பகல் 03.36 வரை பின்பு விசாகம். சித்தயோகம் பகல் 03.36 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்
இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வியாபார ரீதியான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் கிடைத்து எதிர்பார்த்த லாபம் கிட்டும். வெளியூரில் வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.
கன்னி
இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று பொருளாதார ரீதியாக தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மன நிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான நெருக்கடிகள் சற்று விலகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.