இன்றைய ராசி பலன் 19.05.2022 Today Rasi Palan 19-05-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 19-05-2022 வைகாசி மாதம் 05ம் நாள் வியாழக்கிழமை ஆகும். இன்று சதுர்த்தி திதி இரவு 08.24 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. இன்று பூராடம் நட்சத்திரம் பின் இரவு 03.17 வரை பின்பு உத்திராடம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். இன்று நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம். இன்று விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பொருளாதார ரீதியான நெருக்கடிகள் சற்று குறையும்.

ரிஷபம் ராசிக்கு:

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

மிதுனம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கடகம் ராசிக்கு:

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் ராசிக்கு:

இன்று பணவரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் அலைச்சலுக்கேற்ப அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி ராசிக்கு:

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

துலாம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு ராசிக்கு:

இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம் ராசிக்கு:

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். எதிலும் நிதானம் தேவை.

கும்பம் ராசிக்கு:

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சாதகமான பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம் ராசிக்கு:

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 18.05.2022 Today Rasi Palan 18-05-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 20.05.2022 Today Rasi Palan 20-05-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!