இன்று 19-03-2021 பங்குனி மாதம் 06ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். சஷ்டி திதி பின்இரவு 04.48 வரை பின்பு வளர்பிறை சப்தமி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.44 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பகல் 01.44 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு நல்லது. இன்று கரி நாள். இன்று சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷம்: இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியுடன் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை அமையும்.
மிதுனம்: இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்: இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
சிம்மம்: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரத்தில் லாபம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி: இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
துலாம்: இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோக ரீதியாக மன உளைச்சல் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்: இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு: இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை அளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்: இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று சுமாராக இருக்கும்-. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
கும்பம்: இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
மீனம்: இன்று குடும்பத்தோடு பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.