இன்றைய ராசி பலன் 11.03.2022 Today Rasi Palan 11-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 11-03-2022 மாசி மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்றைய‌ நாள் முழுவதும் வளர்பிறை நவமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.35 வரை பின்பு திருவாதிரை. இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை 10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள் உண்டாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்களுக்கு மனஉளைச்சல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடனும், சிக்கனமுடனும் இருப்பது நல்லது. வியாபார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம் ராசிக்காரர்களுக்கு!

இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு அமையும்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு!

இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு!

இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு!

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும் படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.

மகரம் ராசிக்காரர்களுக்கு!

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் ஏற்படும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு!

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிட்டும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு!

இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் செல்வத்தோடு வாழ சில மந்திரங்கள் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய விடையங்கள்!
Next articleஇன்றைய ராசி பலன் 12.03.2022 Today Rasi Palan 12-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!