இன்றைய ராசி பலன் 10.08.2022 Today Rasi Palan 10-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 10-08-2022 ஆடி மாதம் 25ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று திரியோதசி திதி பகல் 02.16 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி ஆகும். இன்றைய தினம் பூராடம் நட்சத்திரம் காலை 09.39 வரை பின்பு உத்திராடம். இன்றைய நாள் முழுவதும் அமிர்தயோகம். இன்று நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள் ஆகும்.

இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று நீங்கள் தொழில் வியாபாரத்தில் தேக்க நிலையை எதிர் கொள்ள நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 02.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகள் மதியத்திற்கு பிறகு வெற்றி தரும்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு பகல் 02.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் ஏற்படும். பணிச்சுமை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் மூலம் நல்ல செய்தி கிட்டும்.

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலை ஆட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பொருளாதார தேவைகள் நிறைவேறும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் உடனிருப்பர்வகளின் ஒத்துழைப்பால் குறையும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறு சிறு மன சங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுற்றுலாத் துறையினருக்கு புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது!
Next articleசம்பளம் வழங்குவதில் சிரமம்!நெருக்கடி நிலையில் அரசாங்கம்!