Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 04.08.2022 Today Rasi Palan 04-08-2022 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 04.08.2022 Today Rasi Palan 04-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
334

இன்று 04-08-2022 ஆடி மாதம் 19ம் நாள் வியாழக்கிழமை ஆகும். இன்று சப்தமி திதி பின்இரவு 05.07 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. இன்று சித்திரை நட்சத்திரம் மாலை 06.47 வரை பின்பு சுவாதி. இன்று சித்தயோகம் மாலை 06.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று சுபமுகூர்த்த நாள் ஆகும். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று பண சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு உறவினர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும். உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ற வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் தொடர்புகளால் அனுகூலப் பலன் கிட்டும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். நண்பர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று பிள்ளைகளால் பெருமை அடையும் நிகழ்வுகள் நடக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.

கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு:

இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும்

Previous articleஉங்க பிறந்த திகதிக்கு நீங்க போன ஜென்மத்துல இப்படித்தான் இருந்திருப்பீர்கள்!
Next articleரணிலால் கதிகலங்கும் மகிந்த கட்சியினர்!