இன்றைய பஞ்சாங்கம் 25-12-2019,
மார்கழி 09 புதன்கிழமை
தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 11.17 வரை பின்பு அமாவாசை.
கேட்டை நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு மூலம்.
சித்தயோகம் மாலை 04.41 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.
ஸ்ரீ அனுமந்த ஜெயந்தி. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் – 25.12.2019
மேஷம்: உங்கள் ராசிக்கு மாலை 04.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. இன்று உங்களுக்கு சிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
ரிஷபம்: வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.41 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும்.
மிதுனம்: வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள்.
கடகம்: தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை.
சிம்மம்: வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
கன்னி: சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.
துலாம்: பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
விருச்சிகம்: உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு: புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். சகோதர, சகோதரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும்.இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதற்கேற்றாற் போல் இருக்கும்.
மகரம்: பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
கும்பம்: உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும். இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
மீனம்: சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.