Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 03.01.2020 ! இன்றைய பஞ்சாங்கம் !

0

இன்றைய பஞ்சாங்கம்: 03-01-2020, மார்கழி 18, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 11.27 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 07.20 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் 1/2- . அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசி பலன் – 03.01.2020

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதி குறையும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்க அனுகூலமான நாளாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்புடன் முடிப்பார்கள்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் முடிந்து மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.

Previous articleThirukkural Sandranmai Adhikaram-99 திருக்குறள் சான்றாண்மை அதிகாரம்-99 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil
Next articleThirukkural Theevinai Acham Adhikaram-21 திருக்குறள் தீவினையச்சம் அதிகாரம்-21 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil