Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 04.11.2019 திங்கட்கிழமை !

0

இன்றைய பஞ்சாங்கம்
04-11-2019, ஐப்பசி 18, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 04.57 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.23 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 03.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. திருக்கணித குருபெயர்ச்சி பின்இரவு 05.17 மணிக்கு. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் – 04.11.2019

மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

ரிஷபம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்
இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்
இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் உங்களின் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.

துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் பணிசுமை குறையும்.

மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.

கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழர்கள் மறந்து போன இரத்தக் குடி வைத்தியம்! ஈழத்தில் மறையாமல் இருக்கும் அதிசயம் !
Next articleமருத்துவரை நாடிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி ! பிறப்புறுப்பில் உயிர் பிரியும் வலி !