Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan வியாழக்கிழமை இன்றைய ராசி பலன் – 14.11.2019 !

Today Rasi Palan வியாழக்கிழமை இன்றைய ராசி பலன் – 14.11.2019 !

0
985

இன்றைய பஞ்சாங்கம்
14-11-2019, ஐப்பசி 28, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 07.55 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் இரவு 10.47 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2 ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் – 14.11.2019

மேஷம்
இன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.

ரிஷபம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.

கடகம்
இன்று புதிய முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாய்ப்புகள் கிட்டும்.

துலாம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.

விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.

தனுசு
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் லாபங்கள் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

மகரம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும்.

மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

Previous articleகண்ணை மூட வைக்கும் ஷாலு ஷம்முவின் வீடியோ! பாவாடையில் பஜாடா நடனம்.
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 16.11.2019 சனிக்கிழமை !