Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 30.10.2019 !

Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 30.10.2019 !

0
620

இன்றைய பஞ்சாங்கம்
30-10-2019, ஐப்பசி 13, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.01 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அனுஷம் நட்சத்திரம் இரவு 09.59 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் – 30.10.2019

மேஷம்
இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

ரிஷபம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடிகள் ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபார ரீதியான முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கன்னி
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

துலாம்
இன்று தனவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்
இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.

மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

Previous articleஉடலை கருங்கல் போல் மாற்றும் சக்தியுடைய மூலிகை கல்பிரமி ! மூளைக்கு பலம் அளிக்கும் நீர் பிரம்மி !
Next articleநவம்பர் மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம்! உங்களது ராசி இருக்குதா?