Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 21.11.2019 வியாழக்கிழமை !

Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 21.11.2019 வியாழக்கிழமை !

0
1181

இன்றைய பஞ்சாங்கம்
21-11-2019, கார்த்திகை 05, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 11.29 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் மாலை 06.29 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் மாலை 06.29 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் – 21.11.2019

மேஷம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்கள் வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.

கடகம்
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

சிம்மம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.

கன்னி
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியான புதிய முயற்சி எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.

கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

மீனம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி இருக்கும்.

Previous articleவிந்‍‍துக் குறைப்பாடு உடல் பலவீனம் மற்றும் ஆண்மை அதிகரிப்புக்கு சீந்தில் கொடி மற்றும் முருங்கை விதையை இப்படி பயன்படுத்துங்கள் !
Next articleகண்களை பாதுகாக்க தினமும் இரவில் இதை மட்டுமாவது செய்வீர்களா? க‌ண்கள் பாதுகா‌ப்பு சில டிப்ஸ் !