Today Rasi Palan இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை – 11.10.2019 !

0

இன்றைய பஞ்சாங்கம்
11-10-2019, புரட்டாசி 24, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி இரவு 10.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30-09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்
இன்று பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்
இன்று பொருளாதார ரிதீயாக நெருக்கடி ஏற்படலாம். நெருங்கியவர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

சிம்மம்
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்
இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை நிலவும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

தனுசு
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வருமானம் பெருகும்.

மகரம்
இன்று வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கும்பம்
இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செலவுகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மீனம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

Previous articleநொண்டி புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai Nondi !
Next articleஅஷ்டமாசித்தி புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumaipithan Sirukathai Ashtama Siddhi – Puthumaipithan Stories !