Today Rasi Palan இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை – 14.10.2019

0

இன்றைய பஞ்சாங்கம்
14-10-2019, புரட்டாசி 27, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.21 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் காலை 10.20 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்
இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினை சற்று குறையும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு காலை 10.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினை படிப்படியாக குறையும்.

கன்னி
இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 10.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

தனுசு
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மகரம்
இன்று உத்தியோக ரீதியாக திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். சுபகாரிய பேச்சவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளி பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிட்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் !
Next articleஅண்ணாச்சிக்கு கதாநாயகி ஆன தமன்னா..? பட்ஜெட் எவ்ளோவ்னு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க!