Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 10.12.2019 ! செவ்வாய்க்கிழமை !

Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 10.12.2019 ! செவ்வாய்க்கிழமை !

0
978

இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு எப்படி அமைய போகிறது என்று பிரபல ஜோதிடரின் கணிப்பு!

இன்றைய பஞ்சாங்கம் என்ன !

10-12-2019, கார்த்திகை 24, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 10.44 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்தகை. முருக-லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. அண்ணாமலையார் தீபம்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். மன அமைதி ஏற்படும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.

துலாம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் பெருகும்.

தனுசு
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற பொறுமையும், உடனிருப்பவர்களை அ-னுசரித்து செல்வதும் முக்கியம். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.

கும்பம்
நீங்கள் இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

மீனம்
இன்று உங்களுக்கு தாராள தன வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதூர்யமாக செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

Previous articleஹீமோகுளோபின் குறைபாட்டால் உடலில் ஏற்படும் அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு , ஆர்வமின்மை என்பவற்றை போக்கி ஹீமோகுளோபினை அதிகரிக்க இதை செய்யுங்க !
Next article40 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகை ஊர்வசியின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?