Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 09.11.2019 சனிக்கிழமை !

Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 09.11.2019 சனிக்கிழமை !

0
926

இன்றைய பஞ்சாங்கம்
09-11-2019, ஐப்பசி 23, சனிக்கிழமை, துவாதசி திதி பிற்பகல் 02.39 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பிற்பகல் 02.55 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் பிற்பகல் 02.55 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் – 09.11.2019

மேஷம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

ரிஷபம்
இன்று பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

துலாம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகமின்றி காணப்படுவீர்கள். நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.

மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கும்பம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

Previous articleதீயாய் பரவும் தகவல், கஸினுடன் சேர்ந்து இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா! சர்ச்சைக்குரிய புகைப்படத்தால் மரண பங்கம் செய்த ரசிகர்கள்!
Next articleவீட்டில் பணக்கஷ்டம் பறந்து அதிர்ஷ்டம் கொட்ட வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க போதும் !