Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 08.11.2019 வெள்ளிக்கிழமை !

Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 08.11.2019 வெள்ளிக்கிழமை !

0
812

இன்றைய பஞ்சாங்கம்
08-11-2019, ஐப்பசி 22, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 12.24 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.12 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் – 08.11.2019

மேஷம்
இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதிலும் கவனம் தேவை.

ரிஷபம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மிதுனம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும்.

கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.

சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினை குறைந்து மன அமைதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.

துலாம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்
இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.

தனுசு
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்வதில் கூட சற்று சிரமம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மகரம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தல் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும்.

Previous articleநடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பிரபல நடிகருடன் காதல். அந்த நடிகருக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா.
Next articleவைரலாகும் புகைப்படம், விஜய் மற்றும் ஏ ஆர் ரகுமான் உடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய இந்துயா!