Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 31-12-2019 இன்றைய ராசி பலன் !

0
579

இன்றைய பஞ்சாங்கம் 31-12-2019
மார்கழி 15, செவ்வாய்க்கிழமை
பஞ்சமி திதி மாலை 04.01 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
சதயம் நட்சத்திரம் பின்இரவு 01.27 வரை பின்பு பூரட்டாதி.
நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00,
மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் – 31.12.2019

மேஷம் : குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும்.

ரிஷபம்: தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

கடகம்: உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

சிம்மம்: புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சேமிப்பு உயரும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும்.

கன்னி: வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

துலாம்: வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம்.கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தனுசு: வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்: பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்படும்.

கும்பம்:‍ இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீனம்:‍ உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: