06-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 06-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 06-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 06.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 06/7/20, Today News in Tamil 06.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

வெள்ளவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் 4 கடைகள் சேதம் இதனால் கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து, டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பூநகரி தம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

“தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு.

“சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது” மனோ கணேசன் தெரிவிப்பு.

நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்ட‌ எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

வவுனியா, கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்.

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பு. 5 கோதுமை மா பக்கற்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவிப்பு.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்பு. கரும்புலிகள் தினத்தை நினைவுகூர்ந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு.

Tamil News Today India

இந்தியாவில் உலகத் தரம்வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு.!

உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

அமீரகம் , சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு (ஜெய்ப்பூருக்கு) ஒப்பந்த விமானம் மூலம் வந்தவர்களிடம் இருந்து 16 கோடி ரூபாய் பெறுமதியான 32 கிலோ தங்கம் பறிமுதல்.

Tamil News Today World

பிரேசில் மக்கள் முகக்கவசத்தினை கடைகள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் குறித்த நடைமுறை பின்பற்றப்படத் தேவையில்லை. இதற்கு ஜனாதிபதி தனக்கான வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிப்பு..

ஜப்பானில் தொடர் மழை மற்றும் மண் சரிவினால் உயி(ரிழ)ப்புகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு.

எத்தியோப்பியாவின் பிரபல பாடகர் ஹாக்காலு ஹான்டீசா (Haacaaluu Hundeessa) கொல்லப்பட்டமையினால் அந்நாட்டின் பல இட‌ங்களிலும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 166 பேர் உயிரிழப்பு.

அமெரிக்க சிறு வர்த்தகர்கள் தமக்கான நிவாரண கடன் தொகைக்காக விண்ணப்பிக்கும் இறுதி திகதியை நீடிப்பது தொடர்பான சட்ட வரைபில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து.

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அறிவதற்காக அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பின் குழு சீனாவுக்கு செல்கிறது.

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வீரருக்கு எதிராக 22 பிரிவுகளில் வழக்குத்தாக்கல்.

Tamil News Live

நடிகர் அப்பாசின் மகள் எமிராவின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இவர் கூடிய விரைவில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம்..!

Today News Tamil – Tamil News Today 06-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article05-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 05-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 05.07.2020 Today Rasi Palan 05-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!