Tamil news today 04-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 04.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 04/7/20, Today News in Tamil 04.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.
Tamil News Today Sri Lanka
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிப்பு.
6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு வந்த பின்னர் தங்கள் முகக் கவசத்தை நீக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுரை.
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க கல்வியமைச்சு தீர்மானம்.!
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரம் இல்லை – சர்வதேச கிரிக்கெட் சபை.
இந்திய பிரஜை ஒருவர் கடல்வழியாகதெப்பம் ஒன்றில் பயணித்து யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியை வந்தடைந்துள்ளார். இவரை கைது செய்த பொலிஸ்.
“போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும்”- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 17 ஆயிரத்தி 936 குடும்பங்கள் குடிநீர் இல்லாமல் தத்தளிப்பு.
மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளிடமிருந்து, வேளாணன்மையை பாதுக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் மின்சாரம் தாக்கி ப(லி).
Tamil News Today India
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் தற்போது கைது..!
சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தினை வருவாய்த் துறையிடம் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு வாழ்த்து.
டெல்லி நொய்டாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
Tamil News Today World
பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது, பயணிகள் ரயில் மோதியதில் 22 பேர் உயி(ரிழ)ப்பு பலர் காயம்.
சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்தால், தேவையான அனைத்து எதிர்விளைவுகளையும் எடுப்பதாக சீனா எச்சரிக்கை.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதில் தனது நாடு பிரகாசமான வெற்றி அடைந்ததாக வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்.
பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் (Edouard Philippe) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மத்திய கனடாவான தெற்கு மானிடோபா மற்றும் ஒன்றாரியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப எச்சரிக்கை.. சுற்றுச்சூழல் திணைக்களம்.
Tamil News Live
தும்பி துள்ளல்’ பாடலை அழகாக இசைத்த மாற்றுத்திறனாளி சிறுமி சஹானா- ஸ்வீட் என பதிவு செய்த இசைப்புயல்.
தங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிந்துள்ளது.
Today News Tamil – Tamil News Today 04-07-2020
By: Tamilpiththan