sani peyarchi 2020 to 2023 சனிப்பெயர்ச்சி 2020-2023: சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 தொடக்கம் 2023 வரை மேஷ ராசிக்கு எப்படி அமையப் போகிறது !
சனிபகவான் சனி பகவான் நீதிமான் அற்புதங்கள் நிகழ்த்துபவர். ஜீவன மற்றும் ஆயுள் காரகன். சனிபகவான் மிக மெதுவாக நகர்ந்து செல்பவர் இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார்.சனியானவர் 12 ராசிகளையும் சுற்றி முடிக்க 30 ஆண்டுகள் எடுத்துவிடுவார். இந்த 30 ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகள் அர்த்தாஷ்டம சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் கண்டச்சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அஷ்டம சனியாகவும் ஏழரை ஆண்டுகள் ஏழரை சனியாகவும் இவர் சஞ்சரிக்கிறார்.அதனால் தான் ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்று சொல்லுவார்கள்.
குருவின் பெயர்ச்சி முடிந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 2020 ஜனவரி 24ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. கால புருஷ தத்துவப்படி சனிபகவான் ஒன்பதாம் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அங்கிருந்து பத்தாம் வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 2023ஆம் ஆண்டு வரை சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிப்பார்.
இந்த கால கட்டத்தில் குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும், பின்னர் கும்ப ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிகும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்கள் சஞ்சாரத்தின் அடிப்படையிலேயே பலன்களை நாம் கணித்துக்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் மேஷம் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு சனிபகவான் இடப் பெயர்ச்சி அடைகிறார். மேஷம் ராசிக்கு இது தொழில் ஸ்தானம். பணவரவு அற்புதமாக இருக்கும். மேஷம் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குருவும், பத்தாம் வீட்டில் சனியும் என தர்ம கர்ம ஸ்தானத்தில் வலுப்பெற்றுள்ளன இது அற்புதமான அமைப்பாகும்.
உங்களுடைய பத்தாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதால் தொழிலில் வெற்றிகள் கிடைக்கும். லாபங்கள் பலமடங்கு அதிகம் கிடைக்கும். மன மகிழ்ச்சியோடும் சந்தோசத்தோடும் இருப்பீர்கள். தொழிலில் மிகப்பெரிய பதவிகள் உங்களை தேடி வரும். குடும்பத்துடன் குதூகலமாக இருப்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். சனிபகவான் பத்து மற்றும் பதினொன்றாம் வீட்டு அதிபதி. தொழில் ஸ்தான அதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், மற்றும் களத்திர ஸ்தானத்தினை பார்க்கிறார்.
சனி பகவான் பார்வையால் சொந்த தொழில் யோகம் தேடி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை சனிபகவான் பார்ப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் விசயத்தில் நல்லவை நடக்கும். சனியின் பார்வை சந்தோஷத்தை தரப்போகிறது. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். குருவின் பார்வையும் உங்க ராசியை பார்ப்பதால் சகலவிதமான யோகங்களும் தேடி வரும். அம்மாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும்.கூட்டு முயற்சி வெற்றியை தேடி தருவார்.
தன வரவு அதிகமாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும்.சொந்த வீடு யோகம் சொந்த வீட்டு கட்டி குடிபோகும் யோகம் வருகிறது. சுகமான சனி பெயர்ச்சியாக அமையப்போகிறது.ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். சனிபகவான் ஆட்சி பெற்று பத்தாம் வீட்டில் அமர்ந்து சசமகா யோகத்தை தருகிறார். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
தம்பதி சமேதராக கோவில் கோவிலாக சென்று ஆலய தரிசனம் செல்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.சகல சௌபாக்கியங்களையும் தருவார் சனிபகவான்.புத்திரர்களால் நன்மைகள் நடைபெறும்.பிள்ளைகள் வெளிநாடு செல்வீர்கள். அப்பாவிற்கு இருந்த சங்கடங்கள் தீரும். அப்பாவிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.யோகம் தரும் சனிபகவான் மேஷம் ராசிக்கு ஆசைகள் கனவுகள் நிறைவேற்றுவார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் இத்தனை நாட்களாக புரிதலின்மை காரணமாக இருந்து வந்த சண்டை சச்சரவு என்ற நிலை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கும். சச்சரவுகள் காணாமல் போய் விடும். குடும்பத்தில் அன்பும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிப்பார்கள். காதல் உறவுகள் கல்யாண பந்தமாக மாறும் தருணமாக இது அமையபோகிறது.
மேஷ ராசியைச் சார்ந்த வயதானவர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வயது அதிகரிப்பதால் நமது ஆரோக்கியத்தில் சிறிது மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று அதிகமாக நீர் அருந்துவதன் மூலம் சிறுநீர் பாதை சார்ந்த உபாதைகளில் இருந்து விடுபடலாம். உண்ணும் உணவில் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள இயலும்.
கர்ம காரகனாக விளங்கும் சனி பகவானால் இந்த பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் உங்கள் வாசல் கதவை தட்டும். உங்களின் பொருளாதார நிலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையும். நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும். தொழிலில் வளர்ச்சியை அளிப்பார். நான்காம் இடத்தை சனிபகவான் பார்ப்பதால் நீங்கள் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கு இந்தப் பெயர்ச்சி ஏற்ற காலமாக இருக்கும். உங்களுடைய தொழிலில் சிறந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் கண்டு நீங்கள் மகிழ்வீர்கள். உங்கள் பொருளாதார நிலை உயர உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
உங்கள் நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். பங்கு வர்த்தகம் மற்றும் ஊக வணிகம் மூலம் நீங்கள் திடீர் அதிர்ஷ்டம் எதிர்பார்க்க இயலாது. பதவி உயர்வை எதிர் பார்த்து காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பதவி உயர்வு கிட்டும். அரச வேலை வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிட்டும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி தொழில் லாபத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது.
மாணவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் சாதகமான பெயர்ச்சி என்றாலும் கூட கவனக் குறைவு உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். எனவே நீங்கள் கல்வியிலும் பரீட்டைகளிலும் நல்ல மதிப்பெண்களை பெற கவனமும் விடா முயற்சியும் அவசியம்.ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பை மேற்கொண்டவர்கள் தங்கள் துறையில் வெற்றி கண்டு மகிழ்வார்கள். வெளிநாடுகளில் மேற்படிப்பை மேற்கொள்ள விரும்புபவர்களின் எண்ணங்கள் கை கூடும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: குருப்பெயர்ச்சியில் குரு பகவான் 28.10.2019 முதல் 13.11.2020 வரை மேஷ ராசிக்கு ஒன்பதுல அமைந்துள்ளது தனுசு ராசிக்கு செல்லும் குருபகவானால் அடையப்போகும் பலன்களைப் பார்க்கலாம். குரு பொன்னவன். சுபமானவர் குரு தனுசு ராசியை எட்டும் காலம் நன்மைகள் நடைபெறும். குருபகவான் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். காலபுருஷ தத்துவப்படி தனுசு ஒன்பதாம் வீடு. குருவிற்கு ஆட்சி வீடு. தனது வீட்டில் அமர்ந்து ஆட்சி செய்யப்போகும் ஹம்ச யோகத்தை தரப்போகிறார். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு’ என்பார்கள் மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு அமரப்போகிறார்கள். தனுசு மீனம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் குரு கடகத்தில் உச்சமடைகிறார் மகர ராசியில் நீசமடைகிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்றால் குரு பார்வை வேண்டும். தெய்வ அருள் கிடைக்கும். குரு தனது 5,7,9ஆம் பார்வையாக மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்க்கிறார். இந்த மூன்று ராசிகளும் சுபத்துவம் அடைகின்றன.
மேஷத்தில் ஒன்பதாம் வீட்டில் அமரும் குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்கிறார் அங்கே சனி, கேது குரு இணைகிறார்.புதிய திருப்பம் ஏற்படும். பணவருமானம் அதிகரிக்கும். குரு பாக்ய ஸ்தானம் அயன ஸ்தய ஸ்தானதிபதி இதுநாள் வரை 8ல் இருந்த குரு பண இழப்பு, உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் திருட்டு பயம், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. குரு எட்டில் இருந்தபோது அனுபவித்த பிரச்சினை துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். பண வருமானம் கூடும். வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஏற்படும். ஓராண்டு காலம் சுபங்கள் நிறைந்த காலம். நல்லவை அதிகமாக நடக்கும். இந்த முறை அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார்.
குருவின் ஐந்தாம் பார்வையாக மேஷத்தை பார்ப்பதால் செல்வாக்கு உயரும் தடைகள் விலகும். இது அற்புதமான குரு பெயர்ச்சி. குரு தன்னுடைய வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் வலிமை அதிகரிக்கும். பொன் போல வாழ்க்கை ஒளிரும். பணம் வருமானம் அதிகரிக்கும். கடன் நிவர்த்தியடையும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுப மங்கள குரு. நன்மைகள் நடைபெறும் காலம். பண ரீதியாக ஏற்பட்டு வந்த தடைகள் விலகும். ரொம்ப புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
நன்மையை தரக்கூடிய குருப்பெயர்ச்சியால் குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டில் குரு பார்வை விழுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.குரு ஏழாம் பார்வையாக உங்களின் மூன்றாம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தை பார்க்கிறார். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய ஆதரவு கிடைக்கும். மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்கள் நடைபெறும். உங்களிடம் பிரச்சினை செய்தவர்கள் விலகுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆளுமை புகழ் கீர்த்தி கிடைக்கும்.
பூர்வ ஜென்மம் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். மனதின் ஆசைகள் நிறைவேறும் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்க பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் உங்களின் முந்தைய காலகட்டத்தில் நீங்கள் செய்த பாவங்கள் தீரும். சிம்மராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். வம்பு வழக்கு தகராறு, நிலத்தகராறு, பங்காளி தகராறுகள் தீரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வி ஸ்தாபனம் நடத்துபவர்களுக்கு நன்மை நடைபெறும்.உயர்கல்வி யோகம் உயர்கல்வி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு உயர்வான நேரம் இதுவாகும். மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த சிரமங்கள் நீங்கும். தொல்லைகள் ஒழியும்.
பாக்ய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் அமர்ந்திருப்பதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை.கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் குடும்பத்தோடு சென்று குல தெய்வத்தை கும்பிடுங்கள். திருமண தடை இருந்த பெண்களுக்கு திருமணம் முடியும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களுக்கு குருபகவான் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது.என்ன தொழில் செய்தாலும் அது வளர்ச்சியை அடையும்.பிரச்சினைகள், தடைகள் நீங்கும். பாவங்கள் தீரும் யோகமான கால கட்டம் இதுவாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை உள்ள கால கட்டங்களில் குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 – ம் பாதத்தில் சஞ்சரிக்கிறார்.
இக்கால கட்டத்தில் சுபச்செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலைக் குறைத்தது உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானத்திம் கை கொடுக்கும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவார்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால் பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். கார்த்திகை 1 – ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10 – ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்கிறார்.
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 – ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைகிறார்.
31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதிஅடைகிறார்.
இக்காலகட்டத்தில் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம். பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும். பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள்.
பைரவர் வழிபாடு நல்லது தெய்வ கடாட்சம் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வாருங்கள். மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும். சனிபகவானை சென்று வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்யுங்கள் கால பைரவர் வழிபாடு செய்யுங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும். இந்த குருப்பெயர்ச்சி முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன், வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். பெண்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். து ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும்.லையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள்.உத்தியோகம் அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.மாணவ மாணவிகள் நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவார்கள். கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மேஷராசிக்காரர்களுக்கு குருவும் சனியும் அதிஸ்டத்தை அள்ளிக்கொடுக்க இருக்கின்றனர். அன்புடன்..
By: Tamilpiththan