New Year Rasi Palan 2020 ! mesha rasi! Aries ! புத்தாண்டு ராசிபலன் 2020 ! மேஷ ராசிக்காரங்களே! அதிர்ஷ்டமழையில் உச்சத்திற்கு செல்லப் போறீங்களாம் !
2020ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.
2020ஆம் புத்தாண்டில் பொருளாதாரம், புதிய வேலை, திருமணம், தொழில் வளர்ச்சி, லாபம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
2020 ஆம் புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். ராகு கேது பெயர்ச்சி 2020ஆம் ஆண்டு கிடையாது. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியின் படி மேஷம் ராசி எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது காணலாம்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களே. பிறக்கப்போகும் 2020ஆம் புத்தாண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். பத்தாம் அதிபதி பத்தில் அமரப்போகிறார். குருபகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அமரப்போகிறார். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களின் தன்னம்பிக்கை கூடும். நீங்கள் பட்ட கடன்கள் அடைபடும். திருமணம் கைகூடி வரும் அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.
யோகமான ஆண்டு
தொழில் செய்வர்களுக்கு லாபம் கூடும். பேச்சிலராக இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் 90 கிட்ஸ் கவலைப்பட வேண்டாம் 2020ல் பலருக்கு கெட்டிமேளம் கொட்டும். திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் 2020ஆம் புத்தாண்டு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. மலைமேல் இருக்கும் முருகனை தரிசனம் செய்யுங்கள்.
பணவரவு
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து பார்க்கும் போது 2020ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே நன்மைகள் அதிகம் நடக்கும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நட்புகள் மூலம் நன்மைகள் நடைபெறும். கடன்கள் அடைபடும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். பயணங்கள் அதிகம் நடக்கும்.
கிரகங்கள் சாதகம்
சனியும் குருவும் சாதகமாக உள்ளது. அரசியல் அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நல்லது நடக்கும். ராணுவம், காவல்துறையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சிகள் அதிகம் நடக்கும். தொழில் துறையினருக்கு முன்னேற்றங்கள் அதிகரிக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். முதல் ஒன்பது மாதங்களில் அதிகம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. மூன்றாம் வீட்டில் உள்ள ராகு செப்டம்பர் மாதம் இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு நகர்கிறார். கேது எட்டாம் வீடான விருச்சிகத்திற்கு நகர்கிறார்.
அரசு வேலைகள் கிடைக்கும்
மாணவர்கள் கல்விக்காக வெளியூர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள். பட்டங்கள் வாங்குவீர்கள். மந்தநிலை மாறி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாக்யம், தொழில் ஸ்தானத்தில் கிரகங்கள் வலுவடைந்து நன்மையை செய்யப்போகிறது. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சனியின் சஞ்சாரத்தினால் வளர்ச்சிகள் அதிகம் கிடைக்கும்.
விடா முயற்சியால் வெற்றியை அடையும் மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு சனி 10லும் குரு 9லும் இருக்கின்றார்கள். சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. சமுதாயத்தில் பிரபலம் அடையும் வாய்ப்பு ஏற்படும். தன்னம்பிக்கை பிறந்து, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கும், அரசு சார்ந்த பணியில் உள்ளவர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும்.
தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். கடன் பிரச்சினை தீரும். குரு கேதுவின் சேர்க்ககையினால் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த கோவிலுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். பயணங்களின் போது கவனம் கொள்வது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்குகளின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடம் உஷாராக இருக்க வேண்டிய காலமிது.
தொழில்:
சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தாராளமாக இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம். எதையும் சமாளித்து தொழிலில் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுக்கிரனும் புதனும் சாதகமான வீட்டில் இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
திருமணம்.
முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் ராகுவினால் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. பாக்கிய குரு பலனை அள்ளித் தர போகின்றார். குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சுபச் செலவு ஏற்படும். அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். இதற்கு முன் நீங்கள் செய்த அனாவசிய செலவினை யோசித்து வருத்தப்படுவீர்கள்.
மாணவர்களுக்கு
கடகத்தில் விழும் சனியின் பார்வையால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். விடுபட்ட பட்டப் படிப்பினை முடிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு
அரசு சம்பந்தப்பட்ட வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தனியார் துறையில் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட வேலையில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
அஷ்டமத்து சனியால் கடந்த வருடம் கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து வரக்கூடிய நல்ல வருடம் தான் இது. மொத்தத்தில் வரப்போகும் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியைத் தேடித்தரும்.