Home thatstamil one india tamil oneindia tamil MLA-வை செருப்பால் அடித்த ம்ப்! வலைதளத்தில் வைரலாகும் வீடியோ!

MLA-வை செருப்பால் அடித்த ம்ப்! வலைதளத்தில் வைரலாகும் வீடியோ!

0
779

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி.யான சரத் திரிபாதி அதே கட்சியைச் சேர்ந்த ராகேஷ்சிங் பாகெல் என்ற எம்.எல்.ஏ.வை தனது காலணியை கழற்றி அடிக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உத்தர பிரதேசம் சான்ட் கபீர் நகரில் மாவட்டத்தின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டங்கள் குறித்தும், மேலும் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சராத் திரிபாதி கலந்துகொண்டார். இதே கூட்டத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராகேஷ் பகேலும் பங்கேற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நடந்த சாலை அடிக்கல் நாட்டுவிழா கல்வெட்டில் தன் பெயர் ஏன் இடம்பெறவில்லை எனக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து விவாதம் முற்றிய நிலையில் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ ராகேஷ் செருப்பைக் கழற்ற முயற்சி செய்தார். உடனே சுதாரித்துக்கொண்ட திரிபாதி தன்னுடைய ஷூவை கழட்டி தாக்குதலைத் தொடங்கினார். தொடர்ந்து சரமாரியாக தாக்கத்தொடங்கினார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

Previous articleஇரவு நேரத்தில் வீட்டு தோட்டத்தில் நடனமாடிய சிறுமியின் ஆவி! பதற வைக்கும் வீடியோ!
Next article6 மாதங்களாக நீடித்த தலைவலி! 8 வயது சிறுமியின் மூளையிலிருந்த உயிரினமொன்றின் 100 முட்டைகள்!