Me tooல் சிக்கிய பிரபல இயக்குனர்! அழகான நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பாலியல் கொடுமை!

0
421

தற்போது நாடு முழுக்க Me Too ல் பாலியல் சர்ச்சைகள் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள் தான் அதிகமாக புகார் கூறி வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டில் பல ஆண்கள் சிக்கி வருகிறார்கள். அண்மையில் வைரமுத்து, சின்மயி சர்ச்சை பெரிதாக போய்க்கொண்டிருக்கிறது.

தமிழில் ராமகிருஷ்ணா படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை ஸ்ரீதேவிகா Me too ல் இயக்குனர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார். கடந்த 2006 ல் ஒரு படத்தில் நடித்த போது ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாராம்.

நள்ளிரவில் யாரோ தொடர்ந்து மூன்று நாட்களாக கதவை தட்டியிருக்கிறார்கள். ஆனால் தேவிகா கதவை திறக்கவில்லையாம். ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லி விசாரித்து பார்க்கையில் வந்தது தான் நடித்த படத்தின் இயக்குனர் தான் என தெரிந்ததாம்.

விசயத்தை ஹீரோவிடம் சொல்ல பின் இயக்குனர் தேவிகாவிடம் கடுமையாக நடந்துகொண்டதோடு காட்சிகளையும் குறைத்து சம்பளத்தையும் கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து தேவிகா மலையாள நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்த போது அங்கிருந்த செயலாளர் இதை பெரிது படுத்தாதே உன் வாழ்க்கை நாசமாகிவிடும் என கூறினார்.

200 6 அவர் தெலுங்கில் ராஜ பாபு என்ற படத்திலும், கன்னடத்தில் மை ஆட்டோகிராஃப், நீலகண்டா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படங்களை இயக்கிய இயக்குனர்களில் யாரோ ஒருவர் தான் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

Previous articleமறுபிறவியின் இரகசியம்! கருட புராணம் கூறும் உண்மைகள்!
Next articleகோவிலுக்கு சென்று வருவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!