#big #boss #losliya
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று அறிவிக்கபட்டது.
இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, மீரா, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளனர்.
வில்லி என்று பெயர் எடுத்த வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்பினாலும் அவர் இந்த வாரம் காப்பாற்றப்பட்டு விடுவார் என்பது நேற்றய டாஸ்கில் அம்பலமாகி விட்டது.
வனிதா வெளியேறினால் பிக் பாஸ் வீட்டில் பாதி பிரச்சினையும் ஓய்ந்து விடும். இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியமும் குறைந்து விடும் என்பதால் வனிதா இந்த வாரம் கண்டிப்பாக செல்ல மாட்டார் என்பது ஆணித்தனமான உண்மை.
வனிதாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், ரசிகர்களை குழப்பவும் மதுமிதா, மீரா ஆகியோரை எலிமினேஷன் லிஸ்டில் சேர்த்துள்ளார் பிக் பாஸ்.
எனவே, ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
அதே போல நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை காப்பாற்ற வேண்டும் எப்பதற்காகவே வனிதாவிற்கு மிகவும் சுலபமான டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதை வனிதாவும் நினைத்ததை போல வெற்றிகரமாக முடித்தார். ஒருவேளை இந்த வாரம் வனிதா வெளியேற்றபடவில்லை என்றால் டாஸ்க்கை சிறப்பாக செய்தற்காக அவருக்கு எதாவது சூப்பர் பவரும் கிடைக்கலாம்.
இந்த பவரை வைத்து அவர் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் அறிவித்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
டாஸ்கில் மோகன் வைத்யா கொலை செய்யபட்ட போது சாண்டி வழக்கம் போல கலாய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ‘அவரை 4 நாள் விட்டு இருந்தால் அவரே போய் இருப்பாரே என்று கூறினார் சாண்டி.
சாண்டி இதனை விளையாட்டா சொன்னாரோ இல்லை சீரியசாக சொன்னாரோ தெரியாது. இந்த வாரம் வெளியேற போவது மோகன் வைத்யா தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.




